சாலையின் நடுவில் பள்ளம்

Update: 2025-02-16 11:59 GMT


மூலனூர்-தாராபுரம் சாலையில் சிவனாதபுரம் தீத்தாம்பாளையம் சாலை பயணிகள் நிழற்குடை பகுதியில் குடிநீர் குழாய் உடைந்து சாலையில் குழி ஏற்பட்டுள்ளது. இந்த குழியில் தண்ணீர் நிரம்பி இருப்பதால் குழி இருப்பது வாகன ஓட்டிகளுக்கு தெரிவதில்லை. இதனால் இரு சக்கர வானங்கள் குழியில் இறங்கும்போது விபத்தில் சிக்குகிறது. அல்லது அதன் அருகில் வரும்போது திடீரென்று பிரேக் பிடிப்பதால் வாகனங்களுடன் வாகன ஓட்டிகள் சாலையில் விழுந்து கிடக்கிறார்கள். எனவே இந்த குழிைய உடனே சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

என்.சி.ேகாபால், நாகமநாய்க்கன்பட்டி

மேலும் செய்திகள்