பந்தலூர் அருகே மேங்கோரேஞ்ச் வழியாக ஏலமன்னா, கொளப்பள்ளி செல்லும் இணைப்பு சாலையானது பல இடங்களில் சேதம் அடைந்து குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். சில நேரங்களில் விபத்துகளும் ஏற்பட்டு வருகிறது. அதுவும் மழை பெய்துவிட்டால் அந்த சாலையை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டு விடுகிறது. எனவே அந்த சாலையை உடனடியாக சீரமைக்க நெல்லியாளம் நகராட்சி அதிகாரிகள் முன்வர வேண்டும்.