குண்டும், குழியுமான சாலை

Update: 2025-02-09 15:19 GMT

சேலம் ராமகிருஷ்ணா சாலையின் நுழைவு பகுதி சாக்கடை கால்வாய் அமைக்கும் பணிக்காக தோண்டப்பட்டது. பணி நிறைவடைந்த நிலையில் சாலை இன்னும் சீரமைக்கப்படாமல் குண்டும், குழியுமாக உள்ளது. இந்த ராமகிருஷ்ணா சாலை பகுதியில் 2 பள்ளிகள் மற்றும் மருத்துவமனைகள் உள்ளன. சாலையில் உள்ள பள்ளங்களால் மருத்துவமனைக்கு செல்லும் நோயாளிகளும், பள்ளி செல்லும் குழந்தைகளும் மிகுந்த சிரமம் அடைகின்றனர். மேலும் சாலையின் சில இடங்களில் வேகத்தடைகள் அமைத்து கொடுத்தால் பள்ளி குழந்தைகளுக்கு பாதுகாப்பாக இருக்கும். எனவே சேதமடைந்து குண்டும், குழியுமாக காணப்படும் சாலையை அதிகாரிகள் விரைந்து சீரமைக்க வேண்டும்.

-தயாளன், சேலம்.

மேலும் செய்திகள்