ஓமலூர் பயணியர் மாளிகை மேட்டூர் மெயின் ரோட்டில் உள்ளது. இந்த பகுதியில் குடிநீர் குழாய் பழுது பார்க்கும் பணி நடந்து முடிந்து ஒரு மாதம் ஆகிறது. ஆனால் குழியை முழுமையாக மூடவில்லை. இதனால் தினமும் இந்த சாலை பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே அதிகாரிகள் வாகன ஓட்டிகளுக்கும், பொதுமக்களுக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் பள்ளத்தை மணல் கொண்டு மூட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அசோக்குமார், ஓமலூர்.