வாழப்பாடியில் இருந்து பொன்னாரம்பட்டிக்கு செல்லும் வழியில் பழனியாபுரம் உள்ளது. இந்த பகுதிக்கு செல்லும் முன்புற வளைவில் குடிநீர் குழாய் அமைப்பதற்கு பள்ளம் தோண்டப்பட்டது. ஆனால் பள்ளம் மூடப்படவில்லை. இதனால் நாளடைவில் பள்ளம் பெரியதாகி உள்ளது. இதன் காரணமாக இரு சக்கர வாகன ஓட்டிகள் மிகவும் சிரமம் அடைகின்றனர். வளைவு பகுதி என்பதால் சில நேரங்களில் விபத்துகளும் ஏற்படுகிறது. எனவே இந்த பகுதியில் தோண்டப்பட்ட பள்ளத்தை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-குமரன், வாழப்பாடி.