திருப்பூர் கொங்கு மெயின் ரோட்டில் இருந்து கொடிக்கம்பம் செல்லும் சாலையின் நடுவே கடந்த ஒரு மாதமாக பள்ளம் ஏற்பட்டுள்ளது. இந்த சாலையில் பனியன் சார்ந்த தொழில் நிறுவனங்கள் அதிக அளவில் உள்ளதால் தினமும் ஏராளமான கனரக வாகனங்கள் மற்றும் இருசக்கர வாகனங்கள் சென்று வருகின்றன. சாலையின் நடுேவ ஏற்பட்டுள்ள பள்ளத்தால் விபத்து ஏற்படுவதற்குள் பள்ளத்தை சீரமைக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.