சாலை சீரமைக்கப்படுமா?

Update: 2025-02-02 17:49 GMT

தாராபுரம் தாலுகா மூலனூர் அருகே உள்ள அக்கரைப்பாளையம் தாராபுரம் ரோட்டில் கழிவுநீர் செல்வதற்கு வசதியாக 6 மாதத்திற்கு முன்பு சாலையில் குழி பறித்தார்கள். ஆனால் இந்த குழியை சரியாக மூடவில்லை. இதனால் இருசக்கர வாகன ஓட்டிகள் இந்த வழியாக செல்லும் போது இந்த குழியினால் கீழே விழுந்து காயமடையும் நிலை ஏற்படுகிறது. சம்பந்தப்பட்ட நபரிடம் பலமுறை கூறியும் நடவடிக்கை இல்லை. இதனால் பொதுமக்கள் நலன் கருதி இந்த சாலையை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்