வாழப்பாடி பொன்னாரம்பட்டி பஸ் நிலையம் அருகில் பள்ளம் ஏற்பட்டு 3 மாதம் ஆகிறது. இதுவரை இந்த பள்ளம் சரி செய்யப்படவில்லை. இந்தப் பகுதியில் வசிக்கும் மக்கள் மற்றும் மங்களபுரத்தில் இருந்து வாழப்பாடிக்கு பள்ளிக்கு செல்லும் மாணவர்கள், வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் பொன்னாரம் பட்டி வழியாக தான் செல்ல வேண்டும். பஸ் மற்றும் இரண்டு, நான்கு சக்கர வாகனத்தில் செல்பவர்கள் மிகவும் சிரமத்துடன் செல்கிறார்கள். இரவு நேரங்களில் இந்த வழியாக செல்வோர் பள்ளம் இருப்பது தெரியாமல் அதில் தவறி விழுந்து விடுகிறார்கள். எனவே இந்த சாலையை விரைந்து சரிசெய்ய வேண்டும்.
ராஜா, வாழப்பாடி.