விபத்தை ஏற்படுத்தும் பள்ளம்

Update: 2025-02-02 16:39 GMT

சேலம் 4 ரோட்டில் இருந்து தம்மண்ணன் சாலை வழியாகவும், காந்தி விளையாட்டு மைதானத்தில் இருந்து சீதாராமன் ரோடு வழியாக சென்றாலும் சத்திரம் பகுதியை அடையலாம். இந்த பகுதி எப்போதும் பரபரப்பாக காணப்படும். மேலும் சத்திரத்தில் அரசு டாஸ்மாக் கடை இயங்கி வருகிறது. இந்நிலையில் சத்திரம் பகுதியில் செல்லும் பாதாள சாக்கடையின் மூடி சேதமடைந்து ஆபத்தான நிலையில் உள்ளது. இதனால் விபத்தை தடுக்க போக்குவரத்து போலீசார் சாலை தடுப்பு (பேரிகார்டு) வைத்துள்ளனர். அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அந்த பள்ளத்தில் விழுந்து காயம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. பொதுமக்கள் நலன் கருதி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து பாதாள சாக்கடை மூடியை சரி செய்ய வேண்டும்.

-பாலா, 4 ரோடு, சேலம்.

மேலும் செய்திகள்