மத்திகிரி கூட்டு ரோட்டில் இருந்து அந்திவாடி செல்லும் சாலையில் மிடுகரப்பள்ளி உள்ளது. இந்த பகுதி வழியாக வாகனங்கள் செல்லும்போது அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன. மேலும் 100 அடி சாலையில் மத்திகிரி கூட்டு ரோட்டில் இருந்து மிடுகரப்பள்ளிக்கு திரும்பும் போது முதியவர்கள், பெண்கள், வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி காயம் அடைகின்றனர். உயிர் சேதம் ஏற்படும் முன்பு உடனடியாக இந்த சாலையில் வேகத்தடை அமைக்க வேண்டும்.
-விமல்குமார், மிடுகரப்பள்ளி.