பந்தலூர் தாலுகா சேரம்பாடி போலீஸ் நிலையம் அருகே உள்ள சாலையில் வாகன போக்குவரத்து அதிகளவில் உள்ளது. ஆனால் அங்கு வேகத்தடைகள் எதுவும் இல்லை. இதனால் வாகனங்கள் அதிவேகமாக இயக்கப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக அங்கு விபத்துகள் அதிகரித்து வருகின்றன. எனவே போலீஸ் நிலையம் முன்பு வேகத்தடைகள் அமைக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் முன்வர வேண்டும்.