எலச்சிபாளையம் ஒன்றியத்திற்கு உட்பட்ட அனைத்து பஸ் நிறுத்தங்களிலும் வேகத்தடை இல்லை. இதேபோல் எலச்சிபாளையம்- மோர்பாளையம் பிரிவு ரோட்டில் வேகத்தடை இல்லாததால் அடிக்கடி சாலை விபத்துக்கள் ஏற்படுகின்றன. மேலும் பள்ளிக்கூடம் உள்ள பகுதி என்பதால் மாணவ, மாணவிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. கடந்த ஆண்டில் மட்டும் 20-க்கும் மேற்பட்ட விபத்துக்கள் நடந்து உள்ளன. எனவே இந்த பகுதியில் வேகத்தடை அமைத்து தர வேண்டும் என்பதே பெற்றோர், ஆசிரியர்களின் பிரதான கோரிக்கையாக உள்ளது.
-மணி, எலச்சிபாளையம்.