தர்மபுரி-பென்னாகரம் சாலையில் குமாரசாமிப்பேட்டை ரெயில்வே மேம்பாலத்தின் கீழ் பகுதியில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக சுரங்கப்பாதை அமைக்கப்பட்டது. இந்த சுரங்கப்பாதையில் கழிவுநீர் தேங்கி நிற்பதாலும், அந்தப் பகுதி புதர் மண்டி இருப்பதாலும் பொதுமக்கள் இதுவரை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. எனவே இந்த சுரங்கப்பாதையை சீரமைத்து இருசக்கர வாகனங்கள் சென்று வரும் வகையில் மாற்றியமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த சுரங்கப்பாதையை பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-முருகேசன், தர்மபுரி.