குண்டும், குழியுமான சாலை

Update: 2025-01-05 13:45 GMT

நாமக்கல்-திருச்சி சாலையில் பொன்விழா நகர் வளைவு வாயில் உள்ளது. இப்பகுதியில் இருந்து ஊருக்குள் செல்லும் சாலை குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. இப்பகுதியில் தான் மாருதிநகர் அரசு பள்ளி செயல்பட்டு வருகிறது. எனவே பள்ளி செல்லும் மாணவ, மாணவிகள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். சிறு, சிறு விபத்துகளும் அவ்வப்போது நடந்து வருகிறது. எனவே சேதமடைந்த சாலையை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-தர்மன், நாமக்கல்.

மேலும் செய்திகள்