பொள்ளாச்சியில் இருந்து வால்பாறை செல்லும் மலைப்பாதையோரங்களிலும், எஸ்டேட் சாலையோரங்களிலும் புதர் செடிகள் அடர்ந்து வளர்ந்து உள்ளன. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் எதிரே வரும் வாகனங்களை காண முடியாமல் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே அங்குள்ள புதர் செடிகளை வெட்டி அகற்ற வேண்டும்.