சாலையில் ஆபத்தான குழி

Update: 2025-01-05 10:26 GMT

திருப்பூர் பெரிச்சிபாளையம் பகுதியில் சாலையின் நடுவே செல்லும் பாதாள சாக்கடை குழாயை சீரமைக்க குழி தோண்டப்பட்டது. ஆனால் அந்த குழி சீரமைக்கப்படவில்லை. இதனால் வாகன ஓட்டிகள் அச்சத்துடன் செல்கிறார்கள். இதேபோல் பெரிச்சிபாளையத்தில் இருந்து வெள்ளியங்காடு செல்லும் சாலையின் நடுவே உள்ள கழிவு நீர் கால்வாய் பாலம் சேதமடைந்து காணப்படுகிறது. இதற்கு தீர்வு ஏற்படுத்த அதிகாரிகள் முன்வருவார்களா?.


மேலும் செய்திகள்