இலக்கியம்பட்டி ஊராட்சிக்குட்பட்ட வேப்பமரத்து கொட்டாய் பகுதியில் தார்சாலை மிகவும் சேதமடைந்து குண்டு, குழியுமாக காணப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். மேலும் இப்பகுதியில் சிறு சிறு விபத்துக்கள் நடந்த வண்ணமே உள்ளன. எனவே இந்த பகுதியில் சேதமடைந்த சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?.
-ஞானசேகரன், தர்மபுரி.