கிருஷ்ணகிரி நகரில் பெங்களூரு சாலை, சென்னை சாலை பகுதிகளில் மாடுகள் நடுரோடடில் சுற்றித்திரிகின்றன. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகிறார்கள். குறிப்பாக நடுரோட்டில் மாடுகள் படுத்திருப்பதால் விபத்துகள் ஏற்படுகின்றன. மேலும் கால்நடைகளும் விபத்தில் சிக்கி காயம் அடைகின்றன. எனவே நகராட்சி நிர்வாகம் சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகளை பிடித்து அதன் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ரமேஷ், கிருஷ்ணகிரி.