பந்தலூர் தாலுகாவிற்கு உட்பட்ட நெல்லியாளம் அரசு தேயிலை தோட்ட(ரேஞ்ச்-1) எழுபத்தெட்டு ஏரியா பகுதியில் ஏராளமான தொழிலாளர்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள சாலை மிகவும் பழுதடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகளும், பாதசாரிகளும் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். அதுவும், மழை பெய்துவிட்டால் அந்த சாலையை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டு விடுகிறது. எனவே அங்குள்ள சாலையை உடனடியாக சீரமைக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.