கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலைய நுழைவு வாயில் பகுதியில் சாலை மிகவும் மோசமாக உள்ளது. இதனால் பஸ் நிலையத்திற்குள் நுழைய கூடிய அனைத்து பஸ்களும் பள்ளத்தில் குலுங்கி செல்லும் நிலை உள்ளது. அந்த சாலை சேதமாகி பல நாட்கள் ஆகியும் அதிகாரிகள் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே சேதமடைந்துள்ள அந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சந்தோஷ், கிருஷ்ணகிரி.