சுரங்கவழி பாதையில் எரியாத மின்விளக்குகள்

Update: 2024-12-22 13:38 GMT

பர்கூர் அடுத்த சின்ன பர்கூர் அருகே உள்ள கிருஷ்ணகிரி-சென்னை, சென்னை-கிருஷ்ணகிரி புறவழிச்சாலை உள்ள சுரங்கவழிபாதையில் மின்விளக்குகள் கடந்த சில மாதங்களாக எரிவதில்லை. இதனால் இப்பகுதியை கடந்து செல்லும் எமக்கல்நத்தம், நேர்லகோட்டை, ஒப்பத வாடி செல்லும் பாதசாரிகளும், வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் அந்த சுரங்க சாலையை அச்சத்துடனும், பயத்துடனும் கடந்து செல்லும் நிலை உள்ளது. எனவே நெடுஞ்சாலை துறையினர் தாமதம் இன்றி சுரங்கப்பாதையில் உள்ள மின்விளக்குகளை சரிசெய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

-கவுதம், பா்கூர்.

மேலும் செய்திகள்