கோவை திருச்சி ரோடு ராமநாதபுரம் மேம்பாலம் இறங்கும் பகுதிக்கு அருகில் சாலையின் ஒருபுறம் பெயர்த்து எடுக்கப்பட்டு உள்ளது. அங்கு அறிவிப்பு பலகைகள் எதுவும் இல்லை. இதனால் வேகமாக வரும் வாகனங்கள் அங்குள்ள குழியில் தவறி விழுந்து காயம் அடைந்து செல்கின்றனர். குறிப்பாக இருசக்கர வாகன ஓட்டிகள் இரவில் அதிகளவில் விபத்தில் சிக்கி வருகின்றனர். எனவே அங்கு சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள அதிகாரிகள் ஆவன செய்ய வேண்டும்.