கோவையை அடுத்த கவுண்டம்பாளையம் கிரி நகரில் சாலையில் குழி ஏற்பட்டு உள்ளது. அந்த குழியை முறையாக மூடாமல் கல்லை போட்டு அடைத்து வைத்து உள்ளனர். இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. குறிப்பாக இரவு நேரத்தில் விபத்துகள் அதிகம் நடக்கிறது. எனவே அந்த கல்லை அகற்றிவிட்டு குழியை முறையாக மூடி சாலையை சீரமைக்க அதிகாரிகள் முன்வர வேண்டும்.