பந்தலூர் தாலுகாவிற்கு உட்பட்ட படச்சேரியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இங்கு பஸ் நிறுத்த பகுதிக்கு செல்லும் சாலையானது மிகவும் பழுதடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. அதுவும் செங்குத்தாக இருக்கிறது. அதில் வாகனங்களை இயக்க முடிவது இல்லை. மேலும் பொதுமக்கள் தவறி விழுந்து காயம் அடையும் நிலை உள்ளது. எனவே அந்த சாலையை உடனடியாக சீரமைத்து தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.