உடுமலை மத்திய பஸ் நிலையத்தில் இருந்து ராஜேந்திரா சாலை, கபூர்கான்வீதி, ராமசாமி நகர் வழியாக அரசு கலைக் கல்லூரிக்கு சாலை அமைக்கப்பட்டு உள்ளது.இந்த சாலை போதிய பராமரிப்பு இல்லாமல் குண்டும் குழியுமாக மாறி உள்ளது. இதன் காரணமாக வாகன ஓட்டிகள் அவதிக்கு உள்ளாகி வருகிறார்கள்.எனவே ராமசாமி நகர் வழியாக செல்லும் அரசு கலைக்கல்லூரி சாலையை சீரமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.