பெருமாநல்லூரில் இருந்து திருப்பூர் செல்லும் சாலையில் போயம் பாளையம், பிச்சம்பாளையம் பகுதியில் சாலையின் நடுவில் உள்ள ஆபத்தான குழியால் குழந்தைகளை இருசக்கர வாகனத்தில் அழைத்து செல்லும் பெற்றோர்கள் உள்ளிட்ட வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகின்றனர். இரண்டு, நான்கு சக்கர வாகனங்கள் விபத்துக்குள்ளாகி உயிர் பலி ஏற்படும் நிலை உள்ளது. தற்போது மழைக்காலங்களில் தண்ணீர் தேங்கி சேறும் சகதியுமாக காணப்படுகிறது. இதை அதிகாரிகள் யாரும் கண்டு கொள்ளவில்லை. எனவே குழியை சரி செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
குமார், பெருமாநல்லூர்.