வளம் பாலத்தில் ஆக்கிரமிப்பு அகற்றப்படுமா?

Update: 2024-12-15 18:42 GMT


திருப்பூர் எம்.ஜி.ஆர். சிலை சந்திப்பு அருகே வளம் பாலத்தில் சாலையின் இருபுறங்களிலும் ஆக்கிரமிப்பு கடைகள் அதிக அளவில் உள்ளன. தொடர்ந்து விடுமுறை நாட்களில் பொதுமக்கள் அதிக அளவில் அங்கு கூடுவதால் விபத்து ஏற்படும் நிலை உள்ளது. மேலும் அங்கு கூடும் பொதுமக்களால் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டு வருகிறது. ஆக்கிரமிப்பு கடைகளால் விபத்து ஏற்படுவதற்குள் அவற்றை அப்புறப்படுத்த அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அருண்குமார், திருப்பூர்.

மேலும் செய்திகள்