ஓமலூர் தாலுகா தாரமங்கலம் நகராட்சியில் பஸ் நிலையம் அமைந்துள்ளது. இந்த பஸ் நிலையத்தில் இருந்து ஜோதிப்பள்ளி செல்லும் வழியில் 5 வேகத்தடைகள் உள்ளன. இந்த வேகத்தடைகள் வர்ணம் பூசப்படாமல் உள்ளது. இதனால் இரவு நேரங்களில் வேகத்தடைகள் இருப்பது தெரியாமல் இரு சக்கர வாகனத்தில் வருபவர்கள் விபத்தில் சிக்குகின்றனர். எனவே இந்த வேகத்தடைகளுக்கு அவசியம் வா்ணம் பூசி, ஒளிரும் பட்டைகள் பொருத்தி தர அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-கவுதம், ஓமலூர்.