அத்தனூர் சித்தர் கோவில் பகுதியில் இருந்து சேலம், நாமக்கல் செல்லும் சாலைக்கு செல்லும் இணைப்பு சாலை மிகவும் சேதமடைந்து குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமம் அடைந்து வருகின்றனர். மேலும் மழைக்காலங்களில் சாலையில் காணப்படும் மேடு, பள்ளங்களில் நீர் நிரம்பி காணப்படுகிறது. இதனால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே அதிகாரிகள் இந்த இணைப்பு சாலையை புதுப்பிக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-துரை, அத்தனூர்.