ராசிபுரம் அருகே குருக்கபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட எல்லப்பாளையத்தில் சாலை மிகவும் சேதமடைந்து குண்டும், குழியுமாக உள்ளது. தார்சாலை போடுவதற்காக பூமி பூஜை போடப்பட்டது. இதில் ஜல்லிக்கற்கள் பெயர்ந்து மோசமாக உள்ளது. இரண்டு சக்கர வாகனங்களில் செல்வோர் நிலை தடுமாறி கீழே விழுந்து விபத்துக்கு உள்ளாகின்றனர். எனவே உடனடியாக சேதமடைந்துள்ள சாலையை தார் சாலையாக அமைத்து தர சம்பந்தப்பட்டவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ரவிக்குமார், எல்லப்பாளையம்.