சாலையை ஆக்கிரமித்த மரங்கள்

Update: 2024-12-08 16:56 GMT

வெண்ணந்தூரை அடுத்து வெள்ளப்பிள்ளையார் கோவில் பகுதியில் இருந்து அனந்த கவுண்டம்பாளையம் செல்லும் சாலையில் இரு புறங்களிலும் மரங்கள், செடி, கொடிகள் அடர்ந்து சாலையை ஆக்கிரமித்து காணப்படுகிறது. இதனால் எதிரே வரும் வாகனம் தெரியாமல் பலர் விபத்துக்குள்ளாகும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே சாலையின் இரு புறங்களிலும் உள்ள மரம், செடி, கொடிகளை அப்புறப்படுத்த ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-குணா, வெள்ளைப்பிள்ளையார் கோவில்.

மேலும் செய்திகள்