எச்சாிக்கை பலகை அமைக்கலாமே!

Update: 2024-12-08 16:38 GMT

அதியமான்கோட்டை முதல் ஓசூர் வரை புதிதாக 4 வழி சாலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சாலையில் தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றனர். எர்ரணஅள்ளி, ரெட்டியூர், தளவாய்அள்ளி புதூர் உள்ளிட்ட கிராம பகுதிகளில் இருந்து வரும் வாகனங்கள் தேசிய நெடுஞ்சாலையில் எதிர் திசையில் செல்வதால் அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருகிறது. புதிய தேசிய நெடுஞ்சாலை திறக்கப்பட்ட சில மாதங்களில் 10-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். எனவே அதிகாரிகள் தேசிய நெடுஞ்சாலையில் எச்சரிக்கை பலகை, சிக்னல் அமைத்து எதிர்திசையில் பயணிக்கும் வாகனங்களை கட்டுப்படுத்த வேண்டும்.

-சாமிநாதன், ஆத்துக்கொட்டாய்.

மேலும் செய்திகள்