விபத்து அபாயம்

Update: 2024-12-08 16:28 GMT

காவேரிப்பட்டணம் பஸ் நிலையம் முதல் கொசமேடு வரை சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த சாலை பணி நடைபெறும் இடத்தில் சாலையின் நடுவே புளியமரம் ஒன்று உள்ளது. இந்த பகுதியில் உள்ள புளியமரத்தை அகற்றாமல் தார்சாலை அமைக்கப்பட்டுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் இரவு நேரங்களில் புளியமரம் இருப்பது தெரியாமல் மோதி விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே இந்த சாலையின் நடுவே உள்ள புளிய மரத்தை அகற்ற வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

-பிரபு, காவேரிப்பட்டணம்.

மேலும் செய்திகள்