குடிநீர் குழாய் உடைந்து சாலையில் பள்ளம்

Update: 2024-12-08 13:32 GMT


திருப்பூர் 28-வது வார்டு காலேஜ் ரோடு மரக்கடை பஸ் நிறுத்தம் அருகில் குடிநீர் குழாய் உடைந்து ரோட்டில் பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளது. குடிநீர் வீணாகுவதால் பொதுமக்களுக்கு தண்ணீர் சீராக கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது. அதேசமயம் இங்கு ரோட்டின் இருபுறமும் உள்ள தெருவிளக்குகள் எரியாத காரணத்தால் வாகன ஓட்டிகள் அடிக்கடி கீழே விழுவது வாடிக்கையாகி விட்டது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க ஆவன செய்ய வேண்டும்.

சிவா, திருப்பூர்.

மேலும் செய்திகள்