கோவை கணபதி ராமகிருஷ்ணாபுரம் பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையின் ஒரு பகுதி பெயர்ந்து குழி ஏற்பட்டு உள்ளது. இதன் காரணமாக அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கடும் அவதிப்பட்டு வருகிறார்கள். குறிப்பாக இரவு நேரத்தில் இருசக்கர வாகன ஓட்டிகள் தவறி விழுந்து காயம் அடைந்து வருகின்றனர். மேலும் வாகனங்களும் பழுதாகி வருகிறது. அந்த சாலையை உடனடியாக சீரமைக்க வேண்டும்.