தவறி விழும் பாதசாரிகள்

Update: 2024-12-08 12:20 GMT

கோவை சிவானந்தாபுரம் வடக்கு விநாயகபுரம் பகுதியில் உள்ள கிருஷ்ணகவுண்டர் நகரில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு பெய்த மழையால் வெள்ளம் பெருக்கெடுத்து வீடுகளில் புகுந்தது. இதனால் அங்கு மாநகராட்சி சார்பில் மழைநீர் சேகரிப்பு குழி அமைக்கப்பட்டது. ஆனால் அந்த குழியை முறையாக மூடாமல் அப்படியே விட்டு விட்டனர். இதனால் அந்த வழியாக செல்லும் பாதசாரிகள் அந்த குழியில் தவறி விழுந்து காயம் அடைகின்றனர். இதுகுறித்து பலமுறை அதிகாரிகளிடம் முறையிட்டும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே இனிமேலாவது அந்த குழியை முறையாக மூட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்