நொய்யல் வீதியில் சேதமான சாலை

Update: 2024-12-01 20:09 GMT

நொய்யல் வீதியில் சேதமான சாலை

திருப்பூர் நொய்யல் வீதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு குடிநீர் குழாய் பதிக்கும் பணி நடைபெற்றது. தொடர்ந்து குழாய் பதித்த இடத்தில் சரியான முறையில் மூடாததால் விபத்து ஏற்படும் சூழ்நிலை உள்ளது. இதனால் அந்த இடத்தில் இரும்பு தடுப்பு வைக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து நிறைந்த இந்த சாலையில் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். மேலும் பள்ளிகளுக்கு செல்லும் மாணவ-மாணவிகளும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். இதுகுறித்து நடவடிக்கை எடுத்து சாலையை சீரமைக்க வேண்டும்.

கதிர்வேல், திருப்பூர்.

மேலும் செய்திகள்