சேலம் ஜாகீர் அம்மாபாளையம் பகுதியில் பொன்குமார் மைன்ஸ் சாலை உள்ளது. இந்த பகுதியில் கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. தற்போது பருவ மழைக்காலம் என்பதால் சாலையில் உள்ள பள்ளங்கள் முழுவதும் மழைநீர் நிரம்பி சேறும், சகதியுமாக உள்ளது. இதனால் 2 சக்கர வாகனங்களில் செல்வோர் பள்ளங்கள் இருப்பது தெரியாமல் கீழே தவறி விழுந்து விபத்தில் சிக்குகின்றனர். எனவே வாகன போக்குவரத்து அதிகம் உள்ள இந்த பகுதியில் புதிதாக தார்ச்சாலை அமைத்து தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே இப்பகுதி மக்களின் பிரதான கோரிக்கையாக உள்ளது.
-கணேசன், சேலம்.