கோவை சாய்பாபா காலனியில் குடிநீர் திட்டத்திற்காக பிரதான சாலைகளில் குழிகள் தோண்டப்பட்டு உள்ளன. அங்கு குழாய் பொருத்தும் பணி முடிவடைந்து, அந்த குழிகளின் மீது மண் போட்டு மூடப்பட்டு வருகிறது. தற்போது மழை பெய்து வருவதால், மண் போடப்பட்ட பகுதி சேறும், சகதியுமாக மாறி வருகிறது. இதனால் அந்த சாலையில் வாகன ஓட்டிகள் செல்வதற்கு கடும் அவதிப்பட்டு வருகின்றனர். சில நேரங்களில் இருசக்கர வாகன ஓட்டிகள் வலுக்கி விழுந்து காயம் அடைகின்றனர். எனவே உடனடியாக அந்த மண் சாலை மீது தார்சாலை அமைக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டும்.