பந்தலூர் தாலுகாவிற்கு உட்பட்ட புஞ்சைகொல்லியில் இருந்து அரசு தேயிலை தோட்டம்(டேன்டீ) செல்லும் சாலையோர பகுதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள சாலை மிகவும் பழுதடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. மேலும் சாலையோரத்தில் தடுப்புச்சுவரும் இல்லை. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி வருகின்றனர். எனவே அங்குள்ள சாலையை சீரமைப்பதோடு தடுப்புச்சுவர் கட்ட அதிகாரிகள் முன்வர வேண்டும்.