நடைபாதை ஆக்கிரமிப்பு

Update: 2024-11-24 14:52 GMT

நடைபாதை ஆக்கிரமிப்பு

திருப்பூரில் பல்வேறு மாவட்டம் மற்றும் மாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்கள் பனியன் நிறுவனங்களில் தங்கி பணியாற்றி வருகிறார்கள். பொதுவாக ஞாயிற்றுக்கிழமை அன்று திருப்பூர் மாநகராட்சி சுற்றுப்பகுதிகளில் உள்ள கடைவீதிகளில் பொதுமக்கள் கூட்டம் அதிகம் காணப்படும். அத்துடன் பனியன் நிறுவன தொழிலாளர்களுக்கு சனிக்கிழமை சம்பளம் வழங்கப்படுவதால் ஞாயிற்றுக்கிழமை தங்களுக்கு தேவையானவற்றை வாங்க கடைகளுக்கு வருவதால் மக்கள் நடமாட்டம் அதிகம் காணப்படும். இந்த நிலையில் வளர்மதி பாலம் பகுதியில் உள்ள நடைபாதையை ஆக்கிரமித்து தற்காலிக கடைகள் அமைக்கப்படுவதால் பாதசாரிகள் ஆபத்தான வகையில் சாலையில் நடந்து செல்லும் நிலை உள்ளது. இதனால் விபத்துகளும், போக்குவரத்து நெருக்கடியும் ஏற்படுகிறது. இதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பார்களா?

-வரதராஜன், திருப்பூர்.

மேலும் செய்திகள்