புதர் செடிகள் அகற்றப்படுமா?

Update: 2024-11-24 12:38 GMT

பந்தலூர் தாலுகா அய்யன்கொல்லி அருகே மூலக்கடையில் இருந்து கையுன்னி செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையோரத்தில் இருபுறமும் முட்புதர்கள் அடர்ந்து வளர்ந்து உள்ளது. அவற்றின் கிளைகள் சாலை வரை நீண்டு வளர்ந்து உள்ளன. அவை அந்த வழியாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகளின் கண்களை பதம் பார்க்கின்றன. மேலும் வனவிலங்குகள் பதுங்கி இருந்தால் கூட தெரியாது. இதனால் வாகன ஓட்டிகள் தாக்குதலுக்கு ஆளாகும் நிலை உள்ளது. எனவே அங்குள்ள புதர் செடிகளை வெட்டி அகற்ற வேண்டும்.

மேலும் செய்திகள்