சாலை பயன்பாட்டுக்கு வருமா?

Update: 2024-11-17 12:34 GMT

மஞ்சூர் அருகே உள்ள கிண்ணக்கொரை பகுதி தமிழக-கேரள எல்லையில் உள்ளது. இந்த பகுதியில் இருந்து கெத்தை பகுதிக்கு செல்ல சாலை இருந்தது. அந்த சாலை தொடர்ந்து பராமரிப்பில் இல்லாததால் சேதமடைந்து பயன்படுத்த முடியாத நிலைக்கு சென்றது. அத்துடன் செடி, கொடிகள் வளர்ந்து கிடக்கிறது. இதனால் அந்த பகுதி மற்றும் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த பொதுமக்கள் வெளியிடங்களுக்கு செல்ல அடர்ந்த வனப்பகுதியை பயன்படுத்தும் நிலை உள்ளது. எனவே அந்த சாலையை பராமரித்து மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்.

மேலும் செய்திகள்