சாலை சீரமைக்கப்படுமா?

Update: 2024-11-10 17:25 GMT


பட்டுக்கோட்டை அடுத்த ஆலடிக்குமுளை தாமரைக்குளம் வடகரையில் உள்ள சிமெண்டு சாலை சேதம் அடைந்து குண்டும் குழியுமாக உள்ளது. இதனால் பொதுமக்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர். மேலும் இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் கீழே விழுந்து காயமடைகின்றனர். முதியவர்கள், கர்ப்பிணிகள் மற்றும் மாணவ-மாணவிகள் நடந்து செல்ல முடியாமல் அவதியுறுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து சாலையை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்கள், பட்டுக்கோட்டை

மேலும் செய்திகள்