நடைபாதை வசதி

Update: 2024-10-13 18:03 GMT

சேலம் மாவட்டம் சங்ககிரி ஊஞ்சக்கரை மோக்காட்டில் அரசு பள்ளி உள்ளது. இந்த பள்ளிக்கு அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த மாணவ-மாணவிகள் சென்று வருகிறார்கள். சாலை ஓரத்தில் செடி, கொடிகள் முளைத்துள்ளன. இதனால் அவர்கள் சாலையின் நடுவே செல்கிறார்கள். மேலும் மாணவ-மாணவிகள் அந்த வழியாக செல்லும்போது வாகனங்கள் மோதி விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே மாணவ-மாணவிகளின் நலன் கருதி சாலை ஓரத்தில் உள்ள செடி, கொடிகளை அகற்றி நடைபாதை வசதி ஏற்படுத்தி தரப்படுமா?

-சிவராஜ், ஊஞ்சக்கரை.

மேலும் செய்திகள்