பாலக்கோடு நகரின் முக்கிய பகுதிகளான எம்.ஜி.ரோடு, ஸ்தூபி மைதானம், முருகன் கோவில் தெரு ஆகிய பகுதிகளில் உள்ள தார்சாலைகள் சேதமடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமம் அடைந்து வருகின்றன. மேலும் இரு சக்கர வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி கீழே விழுந்து விபத்தில் சிக்கி வருகின்றனர். எனவே அதிகாரிகள் உடனடியாக சேதமடைந்த தார்சாலையை சீரமைக்க வேண்டும்.
-இன்பரசன், பாலக்கோடு.