எச்சரிக்கை பலகை தேவை

Update: 2024-10-06 18:20 GMT

நாமக்கல் மாவட்டத்தில் கன்னியாகுமரி-காஷ்மீர் நெடுஞ்சாலையில் உள்ளது தட்டாங்குட்டை. இங்குள்ள சாலையில் அதிக அளவில் வாகனங்கள் சென்று வருவதால் இங்கு போக்குவரத்து நிறைந்து காணப்படும். மேலும் அந்த பகுதிகளில் உள்ள பள்ளி, கல்லூரி மற்றும் கனரக வாகனங்கள் இவ்வூர் வழிழகு செல்கின்றன. இந்நிலையில் இங்கு அதிவேகமாக செல்வதால் சிறுசிறு விபத்துகள் ஏற்படுகின்றன. எனவே இங்கு விபத்துகள் ஏற்படாத வகையில் எச்சரிக்கை அறிவிப்பு பலகை அமைக்க வேண்டும் என்பதே இந்த பகுதி மக்களின் முக்கிய கோரிக்கையாக உள்ளது.

-பொதுமக்கள், தட்டாங்குட்டை.

மேலும் செய்திகள்