பர்கூர் அரசு என்ஜினீயரிங் கல்லூரிக்கு பல்வேறு பகுதிகளில் இருந்து 500-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் கல்லூரி எதிரில் இருக்கும் தேசிய சுரங்க சாலையில் இறங்கி கல்லூரிக்கு நடந்து வருகின்றனர். இவர்கள் நடந்துவரும் நெடுஞ்சாலை ஓரம் உள்ள சிமெண்டு சி்லாப் உடைந்து காணப்படுகிறது. இதில் மாணவ-மாணவிகள் நடந்து வரும் போது தவறி விழுந்து விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே நெடுஞ்சாலைத் துறையினர் தாமதமின்றி இந்த சிமெண்டு சிலாப்பை மாற்ற நடவடிக்கை எடுக்கும்படி கல்லூரி மாணவ-மாணவிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-எம். யாழினிஸ்ரீ, பர்கூர்.