புதிய தார்சாலை அமைக்கப்படுமா?

Update: 2024-09-29 17:56 GMT

வெண்ணந்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட தட்சன்காடு பகுதியில் இருந்து கோம்பை காடு மலைப்பகுதிக்கு செல்லும் சாலை மிகவும் குண்டும், குழியுமாக உள்ளது. நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் அன்றாட தேவைகளுக்கு தினமும் மலைப்பகுதியில் இருந்து கீழே சென்று வர வேண்டிய உள்ளது. மேலும் மாணவ-மாணவிகள் வெள்ளை பிள்ளையார் கோவில் பகுதியில் உள்ள பள்ளிகளுக்குச் சென்று பயின்று வருகின்றனர். இவர்கள் இருசக்கர வாகனத்தில் மற்றும் சைக்கிள் மூலம் செல்கின்றனர். இந்த சாலையில் செல்லும்போது தவறி கீழே விழுந்து காயம் அடைகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் புதிய தார்சாலை அமைக்க வேண்டும்.

-கதிர்வேல், கோம்பை காடு.

மேலும் செய்திகள்