தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு ஒன்றியம், கரகதஅள்ளி ஊராட்சி அருந்ததியர் காலனியில் தரைப்பாலம் உடைந்து ஓட்டை விழுந்து உள்ளது. அவ்வழியாக விவசாய விளை பொருட்களை இரு சக்கர வாகனத்திலும், 4 சக்கர வாகனத்திலும் விவசாயிகள் கொண்டு செல்கின்றனர். மேலும் பள்ளி, கல்லூரி வாகனங்களும் செல்கின்றன. இரவு நேரங்களில் அவ்வழியாக வாகன ஓட்டிகள் சென்று வருவதால் குழியில் தவறி விழும் வாய்ப்பு உள்ளது. விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் இந்த தரைப்பாலத்தை சரி செய்து தரவேண்டும் என்பதே வாகன ஓட்டிகள், இந்த பகுதி மக்களின் முக்கிய கோரிக்கையாக உள்ளது.
-பெருமாள், கரகத அள்ளி.